நெதர்லாந்தில் சர்வதேச அளவில் காவலர் மற்றும் தீயணைப்பு வீரர்களுக்கான தடகள போட்டி நடைபெற்றது. இந்த தடகள போட்டியில் பல்வேறு நாடுகளில் இருந்து போலீசார், தீயணைப்பு வீரர்கள் கலந்து கொண்டனர். இதில் இந்திய அணியின் குமரி மாவட்ட ஆள் கடத்தல் தடுப்பு பிரிவில் பணியாற்றும் பெண் போலீஸ் ஏட்டு கிருஷ்ணரேகாவும் விளையாட்டு போட்டியில் பங்கேற்றார். அதனை தொடர்ந்து உயரம் தாண்டுதல், 100 மீட்டர் ஓட்டம், 400 மீட்டர் ஓட்டம் மற்றும் நீளம் தாண்டுதல் ஆகிய தடகள போட்டியில் கலந்துகொண்டு 3 தங்கமும், ஒரு வெள்ளி பதக்கமும் வென்று சாதனை படைத்துள்ள்ளார். இவர் நேற்று நாகர்கோவிலுக்கு வந்தார். அவருக்கு கோட்டா ரயில் நிலையத்தில் குமரி மாவட்ட போலீஸ் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
அப்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிஹரன் பிரசாத் பூங்கொத்து, பாராட்டு சான்று கொடுத்து வாழ்த்தினார். இதில் கூடுதல் போலீஸ் சூப்பிரன்டு ஈஸ்வர நாகர்கோவில் துணை போலீஸ் சூப்பிரண்டு நவீன் குமார் மற்றும் போலீசார் ஆகியோர் கலந்து கொண்டனர். இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், என்னுடைய இந்த வெற்றிக்கு உறுதுணையாக இருந்த தமிழக அரசு, போலீஸ் டி.ஜி.பி. மற்றும் குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 77 நாடுகள் பங்கேற்ற இந்த போட்டியில் 3 தங்கம், ஒரு வெள்ளி பதக்கம் வென்றது என்பது மகிழ்ச்சியாக உள்ளது. இது என்னுடைய கடின உழைப்பில் கிடைத்த வெற்றி ஆகும். மேலும் இதனை போல பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு கூடுதலாக தங்க பதக்கங்கள் பெற வேண்டும் என்பதை குறிகோள் என்று அவர் தெரிவித்துள்ளார்.