வருகின்ற ஜூலை 23 ஆம் தேதி டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் துவங்குகிறது. அதற்கு மதுரையை சேர்ந்த தடகள வீராங்கனை ரேவதி தேர்ச்சி பெற்றுள்ளார். வறுமையின் பிடியில் இருந்தாலும் தன்னுடைய சொந்த முயற்சியாலும் விடா முயற்சியாலும் டோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கு தேர்வாகியுள்ள தடகள வீராங்கனை ரேவதிக்கு பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில் டோக்கியோவில் துவங்கவிருக்கும் ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா சார்பாக பங்கேற்கும் மதுரையை சேர்ந்த தடகள வீராங்கனை ரேவதிக்கு உரிய ஆதரவை வழங்க முயல்வதாக தமிழக நிதியமைச்சர் தியாகராஜன் உறுதியளித்துள்ளார். மேலும் தமிழகத்தை சேர்ந்த ஒலிம்பிக்ஸ் வீரர்கள் அனைவரையும் பதக்கங்களை வெல்ல வாழ்த்தியுள்ளார்