தடகள வீராங்கனை ரேவதிக்கு ரயில்வேயில் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. விளையாட்டுத்துறை, கலைத் துறை ஆகியவற்றில் முன்னணியில் இருப்பவர்களை ஊக்குவிப்பதற்காக இந்திய ரயில்வேயில் நிரந்தர பணியில் வழங்கப்படுவது வழக்கம். இந்நிலையில் டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்ற மதுரையை சேர்ந்த தடகள வீராங்கனை ரேவதி வீரமணிக்கு ரயில்வேயில் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, ரயில்வேயில் தற்போது மதுரை ரயில்வே கோட்டத்தில் கமர்சியல் கிளர்க்காக பணிபுரிந்து வரும் ரேவதிக்கு ஊழியர் நல ஆய்வாளராக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது என மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் பத்மநாபன் ஆனந்த் தெரிவித்துள்ளார்.