Categories
உலக செய்திகள்

தடம்புரண்ட புல்லட் ரயில்…. டிரைவர் உயிரிழப்பு…. 7 பேர் படுகாயம்…. பெரும் சோகம்…!!!!!!!!

சீனாவில் புல்லட் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளான சம்பவத்தில் டிரைவர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவின் தென் கிழ மாகாணமான கின்யாங்கில் இருந்து தெற்கு மாகாணமான கன்ங்சொவ்  பகுதிக்கு  இன்று காலை 10 மணியளவில் புல்லட் ரயில் சென்று கொண்டிருந்தது. இந்த நிலையில் அந்த புல்லட் ரயிலில் 136 பயணிகள் பயணம் மேற்கொண்டனர். ரோங்க்ஜூகங் எனும் பகுதியில் உள்ள நிலையத்திற்கு ரயில் வந்து கொண்டிருந்தபோது திடீரென தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் புல்லட் ரயிலில் டிரைவர் உயிரிழந்துள்ளார்.

மேலும் 7 பயணிகள் படுகாயம் அடைந்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு குழுவினர் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் ரயில் நிலையத்திற்கு அருகே உள்ள மலைப் பகுதியில் திடீரென ஏற்பட்ட நிலச்சரிவு வேகமாக சென்று கொண்டிருந்த ரயிலின் 7,8 வது  பெட்டிகளின் மீது மோதியதால் விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது.

Categories

Tech |