Categories
தேசிய செய்திகள்

தடம் புரண்ட சரக்கு ரயில்…. திடீர் விபத்து….. பெரும் பரபரப்பு….!!!

அலகாபாத்திலிருந்து தீன்தயாள் உபாத்யாயாவிற்கு சென்று கொண்டிருந்த சரக்கு ரயில் விபத்துக்குள்ளானது.

இன்று காலை 6:40 மணிக்கு சண்டவுலி ரயில் நிலையம் அருகே சென்று கொண்டிருந்த ரயிலின் 8 பெட்டிகள் திடீரென தடம் புரண்டது. ரயில் பெட்டிகள் தடம் புரண்டதால் அந்த வழித்தடத்தில் மற்ற ரயில்கள் இயக்கம் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் அதிகாரிகள் சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதனால் இந்த வழி தடத்தில் உள்ள ரயில்கள் திருப்பி விடப்படும் அல்லது வியாஸ் நகர் வழியாக தீன்தயாள் உபாத்யாயா சந்திப்புக்கு செல்லும் என்று கிழக்கு மத்திய இரயில்வே தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி ராஜேஷ் குமார் அறிவித்துள்ளார்.

Categories

Tech |