செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் குஷ்பூ, பயங்கரமாக பேசக்கூடிய ஆட்கள் நீங்கள் கூட்டணியில் வைத்திருக்கிறீர்கள். யார் தடுக்கி விழுந்தாலும், நீங்கள் அதைப்பற்றி பேசுவீர்கள், யார் தூங்கினாலும் அதைப்பற்றி பேசுவீர்கள், யார் கொட்டாவி விட்டாலும் அது பற்றி பேசுவீர்கள், அப்ப ஏன் ஒரு சிறுமியை நாம் பறிகொடுத்து இருக்கிறோம் அதை பற்றி பேசவில்லை. அந்த மாதிரி ஒரு தலைவர்களுக்கு என்ன ஆச்சு? பயமா.
உண்மை வெளியே வந்துவிடும் என்ற பயமா? இல்ல இந்த மாதிரி மதமாற்றம் தமிழ்நாட்டில் நடக்குது அதைப்பற்றி பேசினால், சிறுபான்மை மக்கள் நமக்கு ஓட்டு வராது அப்படி ஒரு பயமா. அப்போ நீங்கள் ஒரு அரசியல் செய்வதற்கு காரணம் வந்து நீங்க நல்லா இருக்கணும், உங்கள் குடும்பத்தில் இருக்கின்ற அத்தனை பேரும் நன்றாக இருக்கணும்,
அதை அது மட்டும் போதும். தமிழ் நாட்டில் வாழ்கின்ற குழந்தைகள், மக்கள் எக்கேடு கெட்டுப் போனால் நமக்கு என்ன ? அப்படி தான் நீங்கள் அரசியல் செய்கிறீர்களா… ஒரு முதலமைச்சர் சொல்லும்போது தமிழ்நாட்டில் யாரு உங்களுக்கு வாக்களித்தார்கள், வாக்களிக்கவில்லை என்றாலும் அத்தனை பேருக்கும் அவர் முதலமைச்சர். தமிழ்நாட்டில் வாழுகின்ற ஒவ்வொரு உயிருக்கும் அவர்தான் பொறுப்பாக இருக்க வேண்டும். ஒவ்வொரு இடத்தில் பிரச்சனை வரும்போது அதற்கு அவர்கள் பதில் கொடுக்க வேண்டும்.
ஒருவேளை என்னுடைய எதிர்பார்ப்புகள் கொஞ்சம் அதிகமாக இருக்கிறதோ அப்படி பேச மாட்டார் என்று எனக்கு நல்லாவே தெரியும், ஆனால் அதை தாண்டியும் நான் மாண்புமிகு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் பேசுவார் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். அப்படி இல்லை, நான் பேசும்போது தனிப்பட்ட விதமாகவோ,ஒரு கட்சி சார்பாக மட்டுமே பேசவில்லை, ஒரு தாய் என்ற முறையில் நான் பேசுகிறேன், தமிழ் நாட்டில் வாழுகின்ற ஒவ்வொரு தாய்மார்களுக்காக நான் பேசுகிறேன், தமிழ் நாட்டில் வாழ்கின்ற ஒவ்வொரு பெற்றோர்களுக்காக பேசுகிறேன்… வாய திறந்து பேசுங்கள் என தெரிவித்தார்.