தடுப்பு கட்டை மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள அம்மாபாளையம் பகுதியில் வினோத்குமார்(33) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கரூரில் இருக்கும் அழகு நிலையத்தில் மேலாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் வினோத் வேலைக்காக தனது மோட்டார் சைக்கிளில் கரூர்-திண்டுக்கல் சாலையில் சுக்காலியூர் மேம்பாலம் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் தாறுமாறாக ஓடி சாலையோர இருந்த தடுப்பு கட்டைகள் மீது பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த வினோத்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வினோத்குமாரின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.