கட்டுப்பாட்டை இழந்த பேருந்து தடுப்பு சுவர் மீது மோதிய விபத்தில் 24 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செங்கோட்டையில் இருந்து 42 பயணிகளுடன் மதுரை நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து விருதுநகர் மாவட்டத்திலுள்ள ராஜபாளையம் அரசு மருத்துவமனை அருகே சென்று கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு சுவர் மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 3 குழந்தைகள் உட்பட 21 பேர் படுகாயம் அடைந்தனர். இதற்கிடையில் பழங்கள் லோடு ஏற்றி வந்த சரக்கு வேன் பேருந்தின் பின்புறத்தில் மோதியது.
இதனால் வேன் ஓட்டுனர் திருமலைக்குமார் மற்றும் கண்ணன் ஆகிய 2 பேரும் படுகாயமடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயமடைந்தார் 24 பேரையும் மீட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த ராஜபாளையம் தெற்கு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.