Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தடுப்பு சுவரில் மோதிய மோட்டார் சைக்கிள்…. 25 அடி உயரத்திலிருந்து விழுந்து படுகாயமடைந்த அண்ணன்-தங்கை…. சென்னையில் கோர விபத்து…!!

தடுப்பு சுவர் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் படுகாயமடைந்த அண்ணன் தங்கை இருவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

சென்னை மாவட்டத்திலுள்ள கொள்ளுமேடு விநாயகர் கோவில் தெருவில் கன்னியப்பன்(22) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜோதி என்ற சித்தி உள்ளார். இந்நிலையில் கன்னியப்பன் சித்தியின் மகளான 11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவி பார்கவி என்பவருடன் தாம்பரத்தில் இருந்து வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். இவர்கள் வண்டலூர்- மிஞ்சூர் 400 அடி வெளி வட்டச் சாலையில் மோரை அருகே சென்றபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் மேம்பால தடுப்பு சுவர் மீது பயங்கரமாக மோதியது.

இதனால் அண்ணன் தங்கை இருவரும் 25 அடி உயர மேம்பாலத்தில் இருந்து கீழே விழுந்து படுகாயம் அடைந்தனர். இதனை பார்த்த பொதுமக்கள் இருவரையும் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |