Categories
கரூர் மாவட்ட செய்திகள்

தடுப்பு சுவரில் மோதி கவிழ்ந்த வேன்…. படுகாயமடைந்த 15 பக்தர்கள்…. கோர விபத்து…!!

கட்டுப்பாட்டை இழந்த சுற்றுலா வேன் தடுப்பு சுவரில் மோதி கவிழ்ந்த விபத்தில் 15 பக்தர்கள் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் உள்ள திருவானைக்காவல் பகுதியில் வசிக்கும் 20 பக்தர்கள் ஒரு சுற்றுலா வேனில் திருப்பூரில் இருக்கும் வெள்ளகோவில் திருவிழாவிற்கு சென்று கொண்டிருந்தனர். இந்த திருச்சி-கரூர் தேசிய நெடுஞ்சாலையில் வெங்கக்கல்பட்டி பிரிவு பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது ஒருவர் மோட்டார் சைக்கிளில் சாலையைக் கடக்க முயற்சி செய்துள்ளார். அந்த மோட்டார் சைக்கிள் மீது மோதாமல் இருப்பதற்காக வேன் ஓட்டுனர் பிரேக் பிடித்துள்ளார்.

அப்போது கட்டுப்பாட்டை இழந்து சுற்றுலா வேன் தடுப்பு சுவர் மீது மோதி கவிழ்ந்துவிட்டது. இந்த விபத்தில் இடிபாடுகளில் சிக்கி 15 பேர் காயமடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 15 பேரையும் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |