Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தடுப்பு சுவரில் மோதி விபத்து…. நடுரோட்டில் பற்றி எரிந்த கார்…. சென்னையில் பரபரப்பு….!!

தடுப்பு சுவர் மீது மோதி கார் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாவட்டத்தில் உள்ள செம்பாக்கம் பகுதியில் லோகேஸ்வரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது காரில் பல்லாவரம் நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் குரோம்பேட்டை பெரிய ஏரி அருகில் இருக்கும் ரேடியல் சாலையில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக லோகேஸ்வரனலோகேஸ்வரன் கார் தடுப்பு சுவர் மீது மோதி தீப்பிடித்து எரிய ஆரம்பித்துள்ளது.

இதனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த லோகேஸ்வரன் உடனடியாக காரில் இருந்து கீழே இறங்கினார். இதுகுறித்து தகவலறிந்த எனக்கு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காரில் பற்றி எரிந்த தீயை அணைத்துவிட்டனர். ஆனால் இந்த விபத்தில் காரின் முன்பகுதி முழுவதும் எரிந்து நாசமானது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |