Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

தடுப்பு சுவரை தாண்டிய லாரி…. படுகாயமடைந்த 9 பேர்…. திருச்சியில் கோர விபத்து…!!

அரசு பேருந்து மீது கண்டெய்னர் லாரி மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில், 9 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் கண்டெய்னர் லாரி சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை முருகன் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் உள்ள மாணிக்கம்பிள்ளைசத்திரம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் தாறுமாறாக ஓடியுள்ளது. அதன் பிறகு தடுப்பு சுவரை தாண்டி மறுபக்க சாலைக்கு சென்ற லாரி அரசு பேருந்து மீது பலமாக மோதியது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த முருகன் உட்பட 10 பேரை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி முருகன் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். மேலும் 9 பேருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |