Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

தடுப்பு சுவர் அமைக்க…. ரூபாய் 9 கோடி நிதி ஒதுக்கீடு…. நன்றி தெரிவித்த மீனவர்கள்….!!!!

மயிலாடுதுறை மாவட்டத்தில் மீனவ கிராமங்கள் அதிகம் உள்ளன. சுமார் ஒரு லட்சம் மீனவர்கள் இந்த கிராமங்களில் வசித்து வருகின்றனர். இந்த மாவட்டத்தில் பழையார், பூம்புகார் ஆகிய இடங்களில் மீன் பிடி துறைமுகங்கள் அமைந்துள்ளது. தற்போது தரங்கம்பாடியில் புதிதாக மீன்பிடித் துறைமுகம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் குப்பம் கடற்கரையில் பருவநிலை மாற்றத்தின் காரணத்தினால் கடல் அரிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த கடல் அரிப்பு கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து ஏற்பட்டு வருகின்றது. இதனால் கிராமங்களுக்குள் தண்ணீர் முகம் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணத்தினால் அப்பகுதியில் உள்ள மக்கள் வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் மீனவர்கள் தங்கள் படகுகளை கடலுக்கு கொண்டு செல்வதிலும் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் கடல் அரிப்பை தடுக்க கருங்கல் தடுத்து சுவர் அமைத்து தர வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலினிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர். இந்த கோரிக்கையை ஏற்று கொண்டு புதுக்குப்பம் கடல் பகுதியில் கருங்கல் தடுப்பு சுவர் அமைத்து தர ரூபாய் 9 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்த திட்டத்தை விரைவில் முடித்து தர வேண்டும் என்பது மீனவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. இதனை அடுத்து தடுப்பு சுவர் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்த முதல் அமைச்சர் ஸ்டாலினுக்கும் அதனை பரிந்துரை செய்த எம்.எல்.ஏ நிவேதா முருகனுக்கும் மீனவர்கள் சார்பாக நன்றி தெரிவித்துக் கொள்ளப்பட்டது.

Categories

Tech |