கட்டுப்பாட்டை இழந்த லாரி தடுப்பு சுவர் மீது மோதிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டத்திலுள்ள பாலரங்காபுரம் குடோனில் இருந்து உர மூட்டைகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று கரூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையை அரசரடி பிரதான சாலையில் சென்று கொண்டிருந்த போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் தாறுமாறாக ஓடியது.
இதனை அடுத்து சாலையின் நடுவே இருந்த தடுப்பு சுவரில் பயங்கரமாக மோதி லாரி விபத்துக்குள்ளானது. அதிகாலை நேரத்தில் இந்த விபத்து நடந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. இதில் காயமடைந்த ஓட்டுநர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.