மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி தடுப்பு சுவர் மீது மோதிய விபத்தில் முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பாளையங்கோட்டை பகுதியில் கூலி தொழிலாளியான ராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் தாழையூத்து 9-வது பேருந்து நிறுத்தம் அருகில் இருக்கும் மேம்பாலம் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென நிலைதடுமாறிய மோட்டார் சைக்கிள் பாலத்தின் தடுப்பு சுவர் மீது பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த ராஜை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி ராஜ் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.