தடுப்புச்சுவர் மீது லாரி மோதிய விபத்தில் ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிவிட்டார்.
ஈரோடு மாவட்டம் நோக்கி பால் பாரம் ஏற்றிக்கொண்டு டேங்கர் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த லாரி முள்ளாம்பரப்பு பகுதியில் சென்று கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே இருந்த தடுப்பு சுவர் மீது பயங்கரமாக மோதிவிட்டது. இந்த விபத்தில் லாரியின் முன்பக்கம் சேதமடைந்தது.
மேலும் அதிர்ஷ்டவசமாக ஓட்டுநர் காயமின்றி உயிர் தப்பிவிட்டார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தடுப்பு சுவர் பகுதியில் எச்சரிக்கை ஒளிரும் குறியீடு அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.