கொரோனா நோய்த்தொற்றை தடுப்பதற்கு தடுப்பு மருந்து மட்டுமே போதுமானது கிடையாது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
உலகம் முழுவதும் பெரும் தொற்றாக மாறி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸின் பாதிப்பால் இதுவரை 13 லட்சம் மக்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் இதில் 5.4 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வைரஸை கட்டுப்படுத்த இதுவரை தடுப்பு மருந்து எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. இருப்பினும் பல்வேறு நாடுகள் இதற்கான மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதில் தற்போது ஓரளவு முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில் உலக சுகாதார அமைப்பு டெட்ரோஸ் அதானம் கேபிரியேசஸ் இது குறித்து கூறுகையில், தற்போது கொரோனா வைரஸை தடுத்து நிறுத்துவதற்கு தடுப்பு மருந்து மட்டுமே போதுமானது கிடையாது. மேலும் ஆரம்பத்தில் சுகாதாரப் பணியாளர்கள், வயதானவர்கள் மற்றும் ஆபத்து கட்டத்தில் உள்ளவர்கள் ஆகியோருக்கு தடுப்பூசி வழங்குவதில் முன்னுரிமை வழங்கப்பட்டால் உயிரிழப்பு எண்ணிக்கை குறையும்,இதனால் சுகாதார அமைப்பு நலமாக இருக்கும்” என்று கூறியுள்ளார்.