Categories
தேசிய செய்திகள்

தடுப்பூசிக்கு தட்டுப்பாடு இல்லை…. அமைச்சர் ஹர்ஷ்வர்தன் திட்டவட்டமாக மறுப்பு….!!!!

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வந்தனர். ஆனால் கடந்த ஒரு மாதமாக இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்த போதிலும் எந்த ஒரு பலனும் இல்லை. நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே இருக்கிறது.

அதனால் மத்திய அரசு அனைத்து மாநிலங்களிலும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி இரவு ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே சென்றால் கட்டாயம் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது. மேலும் மே 1 முதல் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. அதற்கான முன்பதிவு நேற்று முன்தினம் தொடங்கியது.

இந்நிலையில் பல்வேறு மாநிலங்களில் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு நீட்டிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் தடுப்பூசி களுக்கு எப்போதும் தட்டுப்பாடு ஏற்படாது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார். பல்வேறு மாநிலங்கள் இடம் தற்போது ஒரு கோடி டோஸ்களுக்கு மேல் தடுப்பூசிகள் கையிருப்பு உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் பல லட்சம் டோஸ்கள் அடுத்த சில நாட்களில் விநியோகிக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார். ஒருநாள் கூட இடைவெளி இல்லாமல் தினசரி தடுப்பூசிகள் மாநில அரசுகளுக்கு விநியோகிக்க படுவதாகவும் கூறியுள்ளார்.

Categories

Tech |