ஜெர்மனியில் தடுப்பூசிக்கு பதிலாக உப்புக்கரைசலை செலுத்திய செவிலியர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
வடக்கு ஜெர்மனியில் உள்ள Wilhelmshaven/Friesland பகுதியில் உள்ள ஒரு கொரோனா தடுப்பூசி மையத்தில் பணியாற்றி வரும் செவிலியர் ஒருவர் தடுப்பூசி போட்டுக்கொண்டிரும் போது தடுப்பு மருந்து ஓன்று கை தவறி கீழே விழுந்து உடைந்துள்ளது. இது வெளியே தெரிந்தால் தன் மீது நடவடிக்கை எடுத்துவிடுவார்கள் என பயந்து அதனை மறைத்துள்ளார். மேலும் அந்த மருந்திற்கு பதிலாக தடுப்பூ மருந்தை நீர்க்கச் செய்ய உதவும் உப்புக்கரைசலை 6 பேருக்கு செலுத்தியுள்ளார்.
இதனை தன்னுடன் பணியாற்றும் சக செவிலியரிடம் கூறியுள்ளார். அதை உடனே அந்த பெண் மேலதிகாரிகளுக்கு தெரியப்படுத்தி உடனடியாக அன்றைய தினம் தடுப்பூசி போட்டுக்கொண்ட 200 பேரையும் அழைத்து அனைவரையும் சோதித்துள்ளனர். அதில் 6 பேருக்கு உப்புக்கரைசல் செலுத்தியது உறுதியான நிலையில் உடனடியாக தடுப்பூசி போட்ட செவிலியர் மீது உடலுக்கு ஊறு விளைவித்ததாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.