Categories
உலக செய்திகள்

தடுப்பூசியாலும் தடுக்க முடியாத… புதிய வகை வீரியமிக்க கொரோனா… பிரிட்டனில் பரபரப்பு…!!

பிரிட்டனில் தற்போது கண்டறியப்பட்ட புதிய வகை கொரோனா குறித்து அதிர்ச்சிகரமான தகவலை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

புதிதாக உருமாற்றம் அடைந்த கொரோனா பிரிட்டனில் உள்ள கென்ட் என்ற பகுதியில்  தற்போது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் தற்போது வரை 11 நபர்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் தடுப்பூசி செலுத்தினால் கூட இந்த புதிய தொற்றை தடுக்க இயலாத நிலை ஏற்படலாம் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர். மேலும் புதிய வகை தொற்றை தடுக்கவில்லை எனில் இயற்கையாக உடலில் இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் தடுப்பூசி போன்றவற்றாலும் குணமாக்க முடியாத நிலை ஏற்படலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.

இந்த புதிய உருமாற்றம் அடைந்த கொரோனா, E484K என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது தென் ஆப்பிரிக்கா மற்றும் பிரேசில் போன்ற நாடுகளில் கண்டறியப்பட்ட கொரோனாவுடன் தொடர்புடையது என்றும் நிபுணர்கள் கூறியுள்ளனர். மேலும் உருமாற்றம் அடைந்த இந்த புதிய வகை தொற்று முதலில் பிரிட்டனின் இல்லை என்று கருதப்பட்ட நிலையில் அரசு தற்போது வெளியிட்டிருக்கும் அறிக்கையில் இந்த புதிய வகை கொரோனா குறிப்பிட்ட சில பகுதியில் வசிக்கும் சில நபர்களுக்கு ஏற்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |