பிரிட்டனில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட இரண்டு சுகாதார பணியாளர்களுக்கு ஒவ்வாமை பக்க விளைவுகள் ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகளில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் அனைவரும் ஒரு நொடி கூட வீணடிக்காமல் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்கள். பல்வேறு தடுப்பூசிகள் இறுதி கட்ட சோதனையில் உள்ளன.
இந்நிலையில் பிரிட்டனில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட சுகாதார பணியாளர்கள் இருவருக்கு ஒவ்வாமை பக்க விளைவுகள் ஏற்பட்டு உள்ளது. சிகிச்சையின் உள்ள இருவரும் மீண்டும் வருவதாக பிரிட்டன் அரசு தெரிவித்துள்ளது. முன்னெச்சரிக்கையாக மருந்துகள், உணவுகள் அல்லது தடுப்பூசிகளுக்கு ஒவ்வாமை பிரச்சனை உள்ளவர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தியுள்ளது. இந்தியாவிலும் விரைவில் தடுப்பூசி போடப்பட உள்ள நிலையில், இந்தச் செய்தி பொது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.