Categories
உலக செய்திகள் கொரோனா தடுப்பு மருந்து

தடுப்பூசியால் ஆபத்தா….? 16 பேர் அடுத்தடுத்து உயிரிழப்பு…. சுவிஸில் பரபரப்பு….!!

தடுப்பு மருந்து போட்டு கொண்டவர்களில் 16 பேர் அடுத்தடுத்து உயிரிழந்தது அதிர்ச்சியை எற்படுத்தியுள்ளது.

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஸ்விட்சர்லாந்தில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அந்த தடுப்பூசி அமெரிக்காவின் சைபர் மற்றும் மாடர்னா நிறுவனங்களில் இருந்து பெறப்பட்ட இரண்டு தடுப்பூசிகள் ஆகும். இந்நிலையில் தடுப்பூசி போட்டுக் கொண்ட 16 பேர் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இத்தகவலை சுவிஸ்மெடிக் என்று அழைக்கப்படும் அந்நாட்டின் மருத்துவ கண்காணிப்பு குழுவானது தெரிவித்துள்ளது.

தடுப்பூசி போட்டுக் கொண்ட 364 பேருக்கு சில எதிர்வினைகள் ஏற்பட்டுள்ளது. அதில் கடுமையான பக்க விளைவுகளை எதிர்கொண்ட 16 பேர் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளனர். அவர்களின் சராசரி வயது 86 ஆகும். நோய்த் தொற்றானது இருதயம் மற்றும் நுரையீரல் இவற்றை பதித்து விட்டதாலே உயிர் இழந்திருக்க கூடும் என்ற தகவல் வெளியாகி உள்ளது. மேலும் தடுப்பூசி போடப்பட்டதால் இறந்திருக்க கூடும் என்று எந்த ஆதாரமும் இல்லை என அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

Categories

Tech |