Categories
தேசிய செய்திகள்

தடுப்பூசியால் பக்கவிளைவு… இந்திய மக்களுக்கு அதிர்ச்சித் தகவல்…!!!

கொரோனா தடுப்பூசி மக்கள் பயன்பாட்டிற்கு வரக்கூடிய நிலையில் பக்க விளைவு ஏற்படும் என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கான தடுப்பு மருந்து கண்டறியும் முயற்சியில் உலக நாடுகளில் உள்ள அனைத்து ஆராய்ச்சியாளர்களும் ஒரு நொடி கூட வீணடிக்காமல் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்கள். பல்வேறு நாடுகளில் கொரோனா தடுப்பூசி இறுதிக் கட்ட சோதனையை எட்டியுள்ளது. இருந்தாலும் சில நாடுகளில் கொரோனாவின் தாக்கம் இன்னும் அதிகமாகவே உள்ளது.

இந்தியாவில் இன்னும் ஒரு சில வாரங்களில் கொரோனா தடுப்பூசி மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்ட பிறகு மோசமான பக்கவிளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது என மத்திய சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. முந்தைய காலங்களில் குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகளுக்கு செலுத்தப்பட்ட தடுப்பூசிகளால் பக்க விளைவுகள் ஏற்பட்டு உள்ளதாகவும் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது.

Categories

Tech |