நாளுக்கு நாள் உருமாற்றம் அடையும் கொரோனாவை தடுப்பூசிகளால் கட்டுப்படுத்த முடியும் என்று உலக நாடுகள் நம்பிக்கொண்டிருப்பது முட்டாள்தனமாக உள்ளது என்று நோபல் பரிசு வென்ற மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானிகளான, Dr. அபிஜித் பானர்ஜி மற்றும் Dr. எஸ்தர் டுஃப்லோ ஆகிய இருவரும் கொரோனா தொடர்பில் உலக நாடுகளை எச்சரிக்கின்றனர். விஞ்ஞானிகள் மற்றும் அரசியல் தலைவர்கள் அவர்களது நாட்டு மக்களை காப்பாற்றுவதற்காக புது தடுப்பூசிகள், மருத்துவரீதியான முகக் கவசங்கள் போன்றவற்றை உருவாக்க வேண்டிய நிலை ஏற்படும் என்று கூறியுள்ளனர்.
இது மட்டுமல்லாமல் விதிமுறைகளை தளர்த்துவது குறைக்கப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளனர். தற்போது வரை கொரோனாவால் சிகிச்சை பலனளிக்காமல் சுமார் 3.2 மில்லியன் மக்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் சில நாடுகளில் உருமாற்றமடைந்த கொரோனா தீவிரமாகி வருகிறது.
இந்திய நாட்டை பொருத்தவரை தற்போது வரை கொரோனாவால் பலியானவர்கள் சுமார் 2,30,000நபர்கள். மேலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு மற்றும் அரசின் தாமதமான திட்டமிடுதல் மற்றும் குறைவான தடுப்பூசி விநியோகம் போன்ற காரணங்களால் பலி எண்ணிக்கை தினந்தோறும் அதிகரித்து வருகிறது.
தடுப்பூசிகளினால் கட்டாய பலன் ஏதும் கிடைக்கப் போவதில்லை என்று நோபல் பரிசு வென்ற மருத்துவர்கள் இருவர் கூறியுள்ளனர். இந்தியாவின் தற்போதைய சூழல் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் வராமல் இருப்பதற்கு, தீவிர நடவடிக்கைகளை செயல்படுத்த வேண்டும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.