ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள சோளிங்கரில் வசித்து வருபவர் தமிழ்ச்செல்வி. இவருக்கு திருமணமாகி கணவர் மற்றும் 17 வயதுடைய மகள் இருக்கிறார். கடந்த ஜனவரி 4ஆம் தேதி அரசின் சார்பில் சிறுவர்களுக்கான தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதனையடுத்து அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயின்று வரும் தமிழ்ச் செல்வியின் மகள் 17 வயது சிறுமிக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. தடுப்பூசி செலுத்தியத்திலிருந்து சிறுமியின் உடல்நிலை மோசமாக, அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மருத்துவமனையில் சிகிச்சையின் போது சிறுமியின் பார்வை பறிபோயுள்ளது. இதையடுத்து தடுப்பூசி போட்டதால் பள்ளி மாணவிக்கு பார்வை குறைபாடு ஏற்பட்டதாகவும், மற்றொரு மனைவிக்கு கை, கால்கள் செயல் திறன் குறைந்து விட்டதாக புகார் எழுந்துள்ளது. இதனையடுத்து மாணவிகள் யோகலட்சுமி, பிரியதர்ஷினிக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தியதால் தான் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என மருத்துவர் குழு அறிக்கை மூலம் தெரியவரும் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார்.