சுவிட்சர்லாந்தில் பொதுமக்கள் பொய் கூறி தடுப்பூசி பெற்றுக் கொள்வதாக தகவல் தெரியவந்தது.
சீனாவிலிருந்து தோன்றிய கொரோனா அனைத்து நாடுகளிலும் பரவி சுகாதார சீர்கேட்டினை உண்டாக்கியது. இந்த கொரோனாவினுடைய பிடியிலிருந்து மக்களை பாதுகாக்க அனைத்து பகுதிகளிலும் தடுப்பூசி போடும் பணி நடைபெறுகிறது. அதேபோல் சுவிட்சர்லாந்திலும் மண்டலங்கள் வாரியாக பொதுமக்களுக்கு முறைப்படி தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சில நபர்கள் பொய்யான முறையில் தகவல்களை கூறி தடுப்பூசியை விரைவாக பெற்றுக்கொள்கின்றனர்.
அதாவது துர்காவ் மண்டலத்திலுள்ள வாலிபர் ஒருவர் தனக்கு நோய் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ள ஒருவருடன் தங்கியிருப்பதாக பொய்யான தகவலை கூறி தடுப்பூசியை பெற்றுக்கொண்டுள்ளார். இந்த நிலையில் சில மண்டலங்களில் முறையான ஆவணங்களை வைத்திருந்தால் மட்டுமே தடுப்பூசியை செலுத்துகிறது. இதனிடையே ஆர்கான் மண்டலத்திலிருக்கும் மையங்களில் மருத்துவ சான்றிதழ்களை கொடுத்த பின்புதான் பொதுமக்களுக்கு தடுப்பூசி வழங்கப்படுகிறது.