Categories
உலக செய்திகள்

“தடுப்பூசி அவசியம்”…. ஆராய்ச்சியின் முடிவுகளை…. வெளியிட்ட பிரபல நாடு….!!!

கொரோனா தடுப்பூசியின் ஆராய்ச்சி முடிவுகளை ஸ்வீடன் நாடு வெளியிட்டுள்ளது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் அனைத்து நாடுகளும் கொரோனா தடுப்பூசியை  அமலுக்குக் கொண்டு வந்தது. தற்போது ஸ்வீடன் நாட்டில் கொரோனா  தடுப்பூசி செலுத்துவதன் மூலம் ஏற்படும் பாதுகாப்பு பற்றி ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்து வருகிறார்கள். மேலும் இந்த ஆய்வில் இரண்டாவது கட்ட தடுப்பூசி செலுத்தி 7 மாதங்களுக்குப் பிறகு நோய் எதிர்ப்பு சக்தி குறைய தொடங்கி விடுகிறது என ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.

ஆனால் இரண்டு தடுப்பூசிகளும் செலுத்தியிருந்தால் மருத்துவமனைக்கு செல்ல நேரிடாது என்றும், இழப்பு ஏற்படாது என்றும் தெரியவந்துள்ளது. ஸ்வீடன் நாட்டில் உள்ள உமியா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் பீட்டர் நார்ட்ஸ்ரோம் இதுகுறித்து கூறியதாவது “கொரோனா  தடுப்பூசி நோய் தீவிரம் மரணம் நேரிடுவதில் இருந்து பாதுகாப்பை அளிக்கிறது. எனவே தடுப்பூசி போட்டுக் கொள்வது புத்திசாலித்தனமானது மற்றும் முக்கியமானது”  என கூறியுள்ளார்.

இந்நிலையில் பைசர் தடுப்பூசியின் 2-வது  டோஸ் போட்டு கொண்டு 6 மாதங்களுக்குப் பிறகு கிடைத்த நோய் எதிர்ப்பு சக்தி 29 சதவீதமாக குறைந்து விடுகின்றது என்றும் மாடர்னா தடுப்பூசியின் 2-வது டோஸ் போட்டு ஆறு மாதங்களுக்குப் பிறகு நோய் எதிர்ப்பு சக்தி 59 சதவீதமாக குறைந்து விடுவதும் இந்த ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. மேலும் இந்த ஆராய்ச்சி பற்றிய தகவல் தி லேன்செட் மருத்துவ பத்திரிகையில் வெளியாகி உள்ளது.

Categories

Tech |