Categories
மாநில செய்திகள்

தடுப்பூசி எடுத்துக்கொண்ட கனிமொழி…. பொதுமக்களுக்கு தடுப்பூசி விழிப்புணர்வு….!!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடும் பணி நடந்து கொண்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் மக்கள் மத்தியில் தடுப்பூசி குறித்த அச்சத்தை போக்க பல விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. அவ்வகையில் நடிகர்கள், அரசியல் பிரபலங்கள்  சிலர் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் கொரோனா பரவலை தடுப்பதற்காக அனைவரையும் தடுப்பூசி எடுத்துக் கொள்ள அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தடுப்பூசி எடுத்துக் கொண்டார். மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தான் தடுப்பூசி எடுத்துக் கொண்ட பொழுது எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் இவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |