Categories
சினிமா தமிழ் சினிமா

“தடுப்பூசி என்பது ஹெல்மெட் போல” – டபுள் ஆக்ஷனில் மாஸ் காட்டிய வரலட்சுமி…!!!

தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் தடுப்பூசி போடுவது ஒன்றே கொரோனவை ஒழிக்க நிரந்தர தீர்வு ஆகும். இதனால் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தடுப்பூசி குறித்து பலரும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் நடிகை வரலட்சுமி சரத்குமார் டபுள் ஆக்ஷன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், தடுப்பூசி என்பது ஒரு ஹெல்மெட் போன்றது; விபத்து ஏற்பட்டாலும் ஹெல்மெட் அணிந்திருந்தால் உயிர் பிழைத்து விடுவோம். அதேபோல் தடுப்பூசி போட்டவர்கள் கொரோனாவில் இருந்து தப்பித்து விடுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |