கொரோனா தடுப்பூசி ஏற்றுமதிக்கு தடை விதித்த ஐரோப்பிய ஆணையத்தின் தலைவரை ஜெர்மன் உறுப்பினர் எச்சரிக்கை செய்துள்ளார்.
அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசிகளை பிரிட்டனுக்கு ஏற்றுமதி செய்வதற்கு ஐரோப்பிய ஆணையத்தின் தலைவரான வோன் டெர் லேன் தடை விதிப்பதாக கூறியுள்ளார். இதனைக் குறித்து ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் ஜெர்மன் உறுப்பினர் அன்ன காவஸ்ஸினி தடுப்பூசி ஏற்றுமதி செய்வதில் தடை எவ்வாறு விதிக்கலாம் என்று கூறியுள்ளார். கொரோனா தொற்று அதிகரித்து வருவதை பார்த்தால் நியாயமற்ற விநியோகத்தில் நம்மிடம் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
அதற்காக தடுப்பூசிக்கு ஏற்றுமதி தடை ஒரு தீர்வாக இருக்காது என்று கூறியுள்ளார். எனவே இவ்வாறு தடுப்பூசிகளுக்கு தடை விதித்தால் மற்ற நாடுகளும் இதனை பின்பற்ற கூடும். மேலும் இது ஒரு மோசமான திட்டம் என்றும் அவர் கூறியுள்ளார்.