Categories
உலக செய்திகள்

தடுப்பூசி கட்டாயம்…. போடாவிட்டால் பணி இடை நீக்கம்…!! இராணுவ வீரர்களுக்கு அதிரடி உத்தரவு….!!

அமெரிக்காவில்  தடுப்பூசி போட்டுக்கொள்ளாமல் இருக்கும் 3000 இராணுவ வீரர்கள் பணி இடை நீக்கம் செய்யப்படுவார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது. 

உலகம் முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்வது கட்டாயமாக்கி உள்ளது. இந்நிலையில் அமெரிக்காவின் இராணுவ வீரர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்பது கட்டாயமாகியுள்ளது.மேலும் போருக்கு தயார் நிலையில் இருக்கும் இராணுவ வீரர்கள் கட்டாயமாக தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று பென்டகன் தெரிவித்துள்ளது.

அந்நாட்டு இராணுவ செயலாளர் கிறிஸ்டின் வோர்முத் கூறுகையில் தடுப்பூசி செலுத்தி கொள்ளாத இராணுவ வீரர்கள் மற்ற வீரர்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் மற்றும் போர் தயார் நிலையையும் பதிக்குள்ளாக்குவதாக தெரிவித்துள்ளார். இந்த விதிமுறையை வீரர்கள், ரிசர்வ் படையினர், பயிற்சி வீரர்கள் அனைவருக்கும் பொருந்தும் என்று தெரிவித்தார்.

Categories

Tech |