Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“தடுப்பூசி காரணமில்லை”…. பச்சிளம் குழந்தை திடீர் இறப்பு…. பிரேத பரிசோதனையில் தெரிந்த உண்மை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பிள்ளையார்நத்தம் பகுதியில் ஆட்டோ டிரைவரான விஜயகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுகன்யா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு பிரித்வீர் என்ற மகன் உள்ளான். இந்நிலையில் கர்ப்பிணியான சுகன்யாவுக்கு கடந்த 50 நாட்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தைக்கு குருபிரசாத் என பெயரிட்டனர். நேற்று முன்தினம் சுகன்யா பிள்ளையார் நத்தம் அங்கன்வாடி மையத்தில் நடந்த மருத்துவ முகாமிற்கு சென்றார்.

அங்கு குழந்தையின் 2 தொடைகளில் தலா ஒரு ஊசியும், வலது கையில் ஒரு ஊசியும் செலுத்தப்பட்டது. அன்றைய தினம் திடீரென குழந்தைக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. தடுப்பூசி போட்டதால் காய்ச்சல் வந்திருக்கலாம் என நினைத்து சுகன்யா தனது குழந்தைக்கு மருந்துகளை கொடுத்துள்ளார். இதனையடுத்து நேற்று காலை தாய்ப்பால் குடித்த சிறிது நேரத்தில் குழந்தை மயங்கியதால் உடனடியாக விஜயகுமாரும், சுகன்யாவும் குழந்தையை தூக்கிக்கொண்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதனை செய்த டாக்டர் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதனையடுத்து தடுப்பூசி போட்ட பிறகு தான் குழந்தைக்கு காய்ச்சல் உள்ளிட்ட உடல்நலகுறைவு ஏற்பட்டு இறந்ததாக தம்பதியினர் டாக்டர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்த விஜயகுமார் திண்டுக்கல் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து போலீஸ் அதிகாரி கூறும் போது, குழந்தையின் பிரேத பரிசோதனை அறிக்கையில் தடுப்பூசி செலுத்தியதில் எந்தவித பாதிப்பும் இல்லை நுரையீரலில் பால் தேங்கியதால் மூச்சு திணறி குழந்தை இறந்ததாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர் என கூறியுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |