Categories
மாநில செய்திகள்

தடுப்பூசி சான்றிதழில் மொபைல் எண்ணை மாற்ற…. இதை மட்டும் செய்தால் போதும்…!!!

இந்தியா முழுவதும் கொரோன இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் நிலையில் அதை ஒழிக்க தடுப்பூசி ஒன்றே நிரந்தர தீர்வு என்பதால் அனைத்து மாநிலங்களிலும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இதன் முதற்கட்டமாக 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டது. இதையடுத்து 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. மக்களும் ஆர்வகமாக தடுப்பூசி செலுத்தி வருகின்றனர்.

இவ்வாறு முதல் டோஷ் தடுப்பூசி போட்டவுடன் அதற்கான சான்றிதழை மத்திய அரசு வழங்குகிறது. அதில் தடுப்பூசி போட்டுக்கொண்டவரின் பெயர், வயது, பாலினம், கொரோனா மருந்து, தடுப்பூசி போட்டுக்கொண்ட தேதி உள்ளிட்ட விவரங்கள் இருக்கும். தற்போது தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் இந்தச் சான்றிதழை வைத்திருப்பது அவசியமாகும்.

இந்த தடுப்பூசி சான்றிதழில் செல்போன் எண்ணை மாற்ற வேண்டும் என்றால் www.cowin.gov.in என்ற இணையதளத்தில் தடுப்பூசி செலுத்தும்போது பதிவு செய்து செல்போன் எண்ணை கொடுத்து லாகின் செய்யவும். பிறகுRaise No Issue  என்ற பட்டனை கிளிக் செய்து அதில், transfer a member to new mobile number  என்பதை தேர்வு செய்யவும். பிறகு பெயர் மாற்ற வேண்டிய செல்போன் எண் ஆகியவற்றை பதிவு செய்தால் ஓடிபி வரும். அதையும் பதிவு செய்து continue கொடுத்தால் செல்போனில் மாற்றப்பட்டதற்கான உறுதி தகவல் வரும்.

 

Categories

Tech |