Categories
தேசிய செய்திகள்

தடுப்பூசி சான்றிதழ் இருந்தால் மட்டுமே… ரேஷன் பொருள் கிடைக்கும்…. ஷாக் அறிவிப்பு…!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் குறைவாக தடுப்பூசி போட்டுக் கொண்ட பகுதிகளில் எண்ணிக்கையை மேலும் அதிகப்படுத்துவதற்காக மாநில அரசுகள் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கப்படாது என்று மத்திய பிரதேச அரசு அறிவித்துள்ளது.

இது குறித்து அம்மாநில உணவு வழங்கல் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தடுப்பூசி போட்டுக் கொண்ட சான்றிதழ் இல்லாதவர்களுக்கு தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் மானிய விலையில் ரேஷன் பொருட்கள் கிடைக்காது என தெரிவித்துள்ளது. தடுப்பூசி போட்டு கொண்டதற்கான சான்றிதழ் இல்லாதவர்களுக்கு டிசம்பர் 31 க்கு பிறகு ரேஷன் பொருள் கிடைக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |