Categories
உலக செய்திகள்

கொரோனா தடுப்பூசியால் மரணம்…! இந்த மருந்துகளை பயன்படுத்தாதீர்… அமெரிக்காவில் பரபரப்பு …!!

அமெரிக்காவில் கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி செலுத்தப்பட்ட நபர் ஒருவர் பல மணி நேரங்களுக்கு பிறகு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

அமெரிக்க நாட்டின் கலிபோர்னியா பகுதியில் கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி செலுத்தப்பட்டு பல மணி நேரங்கள் கடந்த பின்பு அந்த நபர் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் அவருக்கு செலுத்தப்பட்ட தடுப்பூசிக்கும் அவரின் உயிரிழப்பிற்க்கும் சம்பந்தம் இருக்கிறதா? என்ற அடிப்படையில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் குறிப்பிட்ட இந்த நபருக்கு கடந்த வருடம் டிசம்பர் மாத இறுதியில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து கடந்த ஜனவரி 21ஆம் தேதியன்று அவருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தடுப்பூசி செலுத்தப்பட்ட பல மணி நேரங்களுக்கு பிறகு அவர் உயிரிழந்துள்ளார். இதனைத்தொடர்ந்து உள்ளூர், மாகாணம் மற்றும் பெடரல் விசாரணை அமைப்புகள் அனைத்தும் அவரின் உயிரிழப்பிற்கான காரணத்தை கண்டறிவதற்காக  விசாரணைகள் ஆரம்பித்துள்ளன.

எனினும் அந்த நபருக்கு செலுத்தப்பட்ட தடுப்பூசி சைபர் நிறுவனத்திற்குரியதா? அல்லது மாடர்னா தடுப்பூசியா? என்பது தொடர்பான தகவல் வெளிவரவில்லை. எனினும் கடந்த வாரத்தில் மட்டும் மாடர்னா தடுப்பூசி செலுத்தி கொண்ட 10 நபர்களுக்கு ஒவ்வாமை ஏற்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து கலிபோர்னியா மாகாணத்தில் குறிப்பிட்ட பேட்ச்சின் தடுப்பூசி மருந்துகளை உபயோகிப்பதை நிறுத்த வேண்டும் என்று தொற்று நோயியல் துறை நிபுணரான Dr.Erica S.Pan என்பவர் ஆலோசனை வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |