Categories
உலக செய்திகள்

தடுப்பூசி செலுத்தப்பட்ட மறுநாளே… அடுத்தடுத்து மரணம் அடைந்த இருவர்… தொடங்கப்பட்ட ஆராய்ச்சி..!!

தென்கொரியாவில் ஆஸ்ட்ராஜெனகா தடுப்பூசி செலுத்திய நபர்கள் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

உலகம் முழுவதும் கொரனோ வைரஸ் பரவி பல்வேறு நாடுகளை கதி கலங்க செய்து வருகிறது. இந்நிலையில் ஆஸ்ட்ராஜெனகா நிறுவனத்தின் தடுப்பூசி செலுத்திக்கொண்ட இருவர் தென்கொரியாவில் உயிரிழந்துள்ளனர். மேலும் இவர்கள் வேறு நோய்களால் ஏற்கனவே பாதிப்படைந்தவர்கள் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக கொரியா நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் இயக்குனரான Jeong Eun-Kyeong என்பவர் கூறியதாவது, cerebrovascular என்ற நோயால் நர்சிங் ஹோமில் உள்ள 63 வயதுடைய நோயாளி பாதிப்படைந்ததார். இந்நிலையில் இவருக்கு நான்கு தினங்களுக்கு முன்பு தடுப்பூசி செலுத்தப்பட்ட பின்பு காய்ச்சல் போன்ற அறிகுறிகள் தென்பட்டது.

இதனால் அவர் செவ்வாய்க்கிழமையன்று பெரிய மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவருக்கு பிளட் பாய்சனிங் மற்றும் நிமோனியா நோயின் அறிகுறிகள் தென்பட்டது. அதன்பின்பு அவர் உயிரிழந்ததாக yonhap ஊடகம் தெரிவித்துள்ளது. மேலும் 50 வயது நபர் ஒருவருக்கு இதயக்கோளாறு மற்றும் நீரிழிவு நோய் பாதிப்பு இருந்துள்ளது. இவரும் மற்றொரு நர்சிங் ஹோமை சேர்ந்த நோயாளி. மேலும் பல முறை இவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.

அதன்பிறகு அவர் மரணமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவருக்கு ஒரு தினத்திற்கு முன்பு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது என்று KDCA தெரிவித்திருக்கிறது. மேலும் இவர்கள் இருவரின் மரணம் தொடர்பாக ஆராய்ச்சி செய்து வருவதாகவும்  தெரிவித்திருக்கிறது. ஆனால் இவ்விருவரும் உயிரிழந்ததற்கு தடுப்பூசி செலுத்தியது தான் காரணம் என்று உறுதியாக நிரூபிக்கப்படவில்லை.

Categories

Tech |