Categories
மாநில செய்திகள்

தடுப்பூசி செலுத்தவில்லை என்றால் சிவப்பு ஸ்டிக்கர்…. தமிழகத்தில் புதிய அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக வருகின்ற 10-ஆம் தேதி வரை வார நாட்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி இரவு 10 மணி முதல் மாலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும். அதேசமயம் 9 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல் அனைவரும் கட்டாயம் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் கடைகள், உணவகங்கள், வணிக நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தாமல் இருந்தால் அந்த கடைகளில் சிவப்பு ஸ்டிக்கரை திருநெல்வேலி மாநகராட்சி ஒட்டி வருகிறது. அந்த ஸ்டிக்கரில் இங்கு பணிபுரியும் அனைவரும் 100% தடுப்பூசியை முழுமையாக செலுத்தப்படவில்லை என்றும் தனிநபர் பாதுகாப்பே  தேசத்தின் பாதுகாப்பு என்றும் அச்சிடப்பட்டுள்ளது.

Categories

Tech |