Categories
தேசிய செய்திகள்

தடுப்பூசி செலுத்தவில்லை என்றால்…. உடனே பணி நீக்கம்…. பிரபல நிறுவனம் அதிரடி அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் வேண்டும் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. அதுமட்டுமில்லாமல் ஒமைக்ரான் வைரசும் வேகமாக பரவி வருகிறது. இதனால் அனைத்து மாநிலங்களும் கூடுதல் கட்டுப்பாடு அமல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி இரவு ஊரடங்கு அமல்படுத்தி வருகிறது. மேலும் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது. இருப்பினும் சிலர் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளாமல் இருக்கின்றனர்.

அதனால் பல்வேறு முன்னணி நிறுவனம் தனது ஊழியர்களை தடுப்பூசி செலுத்த வலியுறுத்தி வருகிறது. அதன்படி தற்போது சிட்டி குரூப் இன்க் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது சிட்டி வங்கியில் பணிபுரியும் ஊழியர்கள் வருகின்ற ஜனவரி 14-ம் தேதிக்குள் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். அவ்வாறு தடுப்பூசி செலுத்தி கொள்ளாத ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு அனைத்து ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |