Categories
மாநில செய்திகள்

தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு…. கொரோனா தொற்று வேகமாக பரவும்…. சுகாதாரத்துறை செயலாளர் அறிவிப்பு….!!!

தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு ஓமைக்ரான் தொற்று வேகமாக பரவும் என சுகாதாரத்துறை செயலாளர் கூறியுள்ளார்.

சென்னையிலுள்ள தேனாம்பேட்டையில் டி.எம்.எஸ் வளாகம் அமைந்துள்ளது. இங்கு சேமித்து வைக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பூசிகளை சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார். அதன்பின் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அந்தப் பேட்டியில் தமிழகத்தில் பிஏ 4 வகையில்‌ 7 பேருக்கும், பிஏ‌ 5 வகையில் 11 பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.

இவர்கள் லேசான தொண்டை வலி மற்றும் காய்ச்சல் அறிகுறிகளில் இருந்து தற்போது குணமடைந்துள்ளனர். இந்நிலையில் உருமாறிய ஓமைக்ரான் தொற்று கொரோனா தடுப்பூசி செலுத்தாதவர்களிடம் வேகமாக பரவும். எனவே வருகிற ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருக்கும் கொரோனா தடுப்பூசி முகாமில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் கலந்துகொண்டு தடுப்பூசி செலுத்தி கொள்ளுங்கள்.

இதனையடுத்து தமிழகத்தில் முதல் தவணை தடுப்பூசி‌ 93.87% பேருக்கும், 2-ம் தவணை தடுப்பூசி 83.6% பேருக்கும் போடப்பட்டுள்ளது. இதுவரை தமிழகத்தில் மொத்தம் 11.18 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. அதன்பிறகு தமிழகத்தில் 10 சதவீதம் மக்கள் மட்டுமே முகக்கவசம் அணிகின்றனர்.

எனவே அனைத்து மக்களும் முகக்கவசம் அணிந்து கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றுமாறு கூறியுள்ளார். மேலும் ஸ்ரீ பெரும்புதூர் ராஜீவ்காந்தி வளாகத்தில் கொரோனா‌ பரவல் அதிகமாக இருப்பதால் மாணவர்களை வெளியே அனுப்பக்கூடாது என சுகாதாரத்துறை செயலாளர் கூறியுள்ளார்.

Categories

Tech |