Categories
தேசிய செய்திகள்

தடுப்பூசி செலுத்தாவிட்டால் ரேஷன் பொருள்கள், சிலிண்டர், பெட்ரோல் கிடையாது…. அரசு அதிர்ச்சி அறிவிப்பு….!!!!

இந்தியாவில் கொரோனா பரவலைத் தடுக்க அனைத்து மாநில அரசுகளும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.தடுப்பூசி நல்ல பலனை அளிப்பதால் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள்,தடுப்பூசி முகாம்கள் மூலம் மக்களுக்கு அனைத்து நாட்களிலும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.இந்த ஆண்டு இறுதிக்குள் 100% தடுப்பூசி செலுத்தி முடிக்க வேண்டும் என்று அரசு இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.

இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத் மாவட்டத்தில் தடுப்பு ஊசி செலுத்தி அவர்களின் விகிதம் மிகக் குறைவாக உள்ளது. இதுவரை 55 சதவீதம் பேர் மட்டுமே தடுப்பூசி செலுத்தியுள்ளனர். இதனால் மக்களை தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையாக ஒரு டோஸ் தடுப்பூசி கூட செலுத்தாதவர்களுக்கு ரேஷன் பொருள்கள்,கேஸ் சிலிண்டர் மற்றும் பெட்ரோல் போன்ற பொருட்கள் விற்பனை செய்யப்பட மாட்டாது என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. உணவகங்கள், ரிசார்ட்களுக்கு வரும் மக்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மக்களை தடுப்பூசி செலுத்த ஊக்குவிக்கவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.

Categories

Tech |