Categories
உலக செய்திகள்

தடுப்பூசி செலுத்திக்கொண்டால்… வித்தியாசமான பரிசு – இது அமெரிக்கா பாணி…!!!

உலகம் முழுவதுமாக பல நாடுகளிலும் கொரோனாவை முற்றிலுமாக ஒழிக்க தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. ஆனால் மக்களிடையே தடுப்பூசி போடுவதற்கு பயமும் ஒருவித குழப்பமும் நீடித்துக் கொண்டே வருகிறது. இதன் காரணமாக ஒரு சிலர் மட்டுமே தடுப்பூசி போட்டுக் கொள்கின்றனர். இதனால் மக்களிடையே தடுப்பூசி போட்டுக் கொள்வதை ஆர்வப்படுத்தும் விதமாக ஒவ்வொரு நாட்டிலும் வித்தியாசமான முறையில் பரிசளித்து  வருகின்றனர்.

அந்த வகையில் அமெரிக்காவில் பொதுமக்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ள தயக்கம் காட்டுவதை மாற்ற லாட்டரி பரிசு வழங்கும் முறை பரவிவருகிறது. கலிபோர்னியா மாகாணம் அரசின் புதிய அறிவிப்பின்படி ஜூன் 15-க்குள் தடுப்பூசி போட்டுக் கொண்ட 10 பேருக்கு தலா 1.5 மில்லியன் டாலர், 30 பேருக்கு தலா 50,000 டாலர் பரிசுடன், முதல் 20 லட்சம் பேருக்கு தலா 50 டாலர் பரிசு கூப்பன் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |