தமிழகம் முழுவதிலும் கொரோணா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. கடந்த செப்டம்பர் 12ஆம் தேதி தமிழகம் முழுவதிலும் மாபெரும் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. அதில் அரசு நிர்ணயித்த 20 லட்சம் இலக்கை கடந்து 28.5 லட்சம் பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டனர். இந்தியாவில் இது மாபெரும் சாதனையை படைத்தது.
இந்நிலையில் தமிழகம் முழுவதும் மீண்டும் இன்று மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. இதையடுத்து ஈரோடு மாவட்டம் பவானியில் மெகா தடுப்பூசி முகாமில் இன்று கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்பவர்களுக்கு குலுக்கல் முறையில் 2 சென்ட் வீட்டுமனை 10 பேருக்கு வழங்கப்படும் என வட்டாட்சியர் அறிவித்துள்ளார். மேலும் திருவள்ளூர், திருவேற்காட்டிலும் தடுப்பூசி செலுத்தி கொள்பவர்களுக்கு கவர்ச்சிகரமான பரிசுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.