Categories
தேசிய செய்திகள்

தடுப்பூசி செலுத்தியதால் மீண்டுவந்த கண்பார்வை… மகிழ்ச்சியில் மூதாட்டி…!!!

 தடுப்பூசி செலுத்திய பிறகு ஒன்பது ஆண்டுகளுக்கு முன் பறிபோன கண்பார்வை மீண்டு வந்ததாக மராட்டியத்தை சேர்ந்த ஒரு பாட்டி தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் பரவி வந்த தொற்று தற்போது படிப்படியாக குறைந்து கொண்டு வருகின்றது. கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. அதுமட்டுமில்லாமல் மக்கள் அனைவரும் முன்பைவிட ஆர்வமாக முன்வந்து தடுப்பு ஊசி செலுத்தி கொள்கின்றன. தடுப்பூசி செலுத்திய பிறகு ஓரிரு நாட்களுக்கு காய்ச்சல் தலைவலி உடம்பு வலி போன்றவை இருப்பது சகஜம்.

ஆனால் இங்கு மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த மதுராபாய் பிட்பி என்ற மூதாட்டிக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. தடுப்பூசி செலுத்திய பிறகு 9 ஆண்டுகளுக்கு முன்பு பறிபோன கண் பார்வை ஒரு கண்ணில் மட்டும் 30% மீண்டும் கிடைத்துள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும் ஒரு கண்ணில் மட்டும் சிறிய அளவில் கண் பார்வை கிடைத்ததால் அந்த மூதாட்டி மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளார்.

Categories

Tech |