Categories
உலக செய்திகள்

தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு…. முக்கிய அறிவிப்பை வெளியிட்ட சௌமியா சுவாமிநாதன்….!!!!

உலகம் முழுவதும் கொரோனா தொற்று பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. இதனால் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வந்தனர். இதையடுத்து அரசின் கடுமையான முயற்சியினாலும், மக்கள் தடுப்பூசி மீது செலுத்திய ஆர்வத்தினாலும், தொற்று படிப்படியாக குறைந்து மக்கள் இயல்பு நிலைக்கு வந்தனர். இந்த நிலையில் உருமாறிய கொரோனா தொற்றான ஒமைக்ரான் மிக வேகமாக பரவி வருகிறது. இதனால் உலக மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். எனினும் கொரோனாவுக்கு எதிராக நம்மிடம் உள்ள ஒரே ஆயுதம் தடுப்பூசி மட்டுமே என்ற நிலையில், தடுப்பூசி போட்டுக் கொண்டு அவர்களுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இந்த நிலையில் கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டவர்களுக்கு ஒமைக்ரான் குறைந்த பாதிப்பை ஏற்படுத்துகிறது என உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். மேலும் அவர் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்திருப்பதாவது, ஒமைக்ரான் தொற்று வேகமாக பரவி வந்தாலும், தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கு குறைந்த பாதிப்பை ஏற்படுத்துகிறது.

மேலும் கொரோனா தடுப்பூசியால் உருவாகும் நோய் எதிர்ப்பு சக்தி மட்டுமின்றி பிற நோய்களையும் எதிர்க்கிறது என்று உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன் கூறியுள்ளார். மேலும் எதிர்பார்த்தபடி, ஒமைக்ரான் தொற்றுக்கு எதிராக டீசல் டி செல் நோய் எதிர்ப்பு சக்தி மிக சிறப்பாக உள்ளது. இது கடுமையான நோய்களிலிருந்து நம்மை பாதுகாக்கும். தடுப்பூசி போடாதவர்கள் தயைகூர்ந்து தடுப்பூசி போடுங்கள் என சௌமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |