கொரோனா தடுப்பூசி முழுமையாக செலுத்திய வெளிநாட்டு பயணிகளுக்கு கட்டுப்பாடுகள் இன்றி பிப்ரவரி 11ஆம் தேதி முதல் அனுமதிக்கப்படுவார்கள் என பிரிட்டன் அரசு அறிவித்துள்ளது.
கொரோனா பரவல் காரணமாக வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகளுக்கு பிரிட்டன் அரசு பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. ஆனால் பிப்ரவரி 11ஆம் தேதி முதல் பல தளர்வு அளிப்பதாக அரசு அறிவித்துள்ளது.
இதுபற்றி பிரிட்டன் நாட்டு அதிகாரிகள், வெளிநாட்டு பயணிகள் முழுமையாக கொரோனா தடுப்பூசி செலுத்தியிருந்தால் வரும் பிப்ரவரி11 முதல் எந்த ஒரு பரிசோதனையும் இல்லாமல் பிரிட்டனுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் எனவும் கொரோனா பரிசோதனைமற்றும் தனிமைப் படுத்திக் கொள்ளுதல் முதலான எந்தவொரு கட்டுப்பாடுகளையும் பின்பற்ற வேண்டாம் என்று கூறினர்.
மேலும் அவர்கள், தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள் தங்கள் பயணத்திற்கு முன்னதாக கொரோனா பரிசோதனை செய்து கொண்டு நெகட்டிவ் சான்றுடன் வரவேண்டும். ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை பிரிட்டன் வந்த இரண்டாவது நாள் நடத்தப்படும்.
“பூஸ்டர் டோஸ் தடுப்பூசி” பணிகள் பிரிட்டனில் வெற்றி அடைந்து உள்ளது. மாணவர்களுக்கு கல்வி நிறுவனங்களுக்கு வருவதற்கு தளர்வுகள் அறிவிக்கப்படுகின்றன என கூறினார்கள். ஏற்கனவே, பிரிட்டனில் முக கவசம் அணிதல் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றுதல் முதலிய கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப் படுவதாக பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறியிருந்தார்.