நாடு முழுவதும் கொரோனா மற்றும் அதன் உருமாறிய தொற்றான ஒமைக்ரான் மிக வேகமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. எனவே அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. மேலும் கொரோனா தொற்றுக்கு நம்மிடம் உள்ள ஒரே ஆயுதம் தடுப்பூசி மட்டுமே. அதனால் தடுப்பசி தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொதுநல வழக்கில், தனிப்பட்ட நபரின் விருப்பமில்லாமல் யாரையும் தடுப்பூசி போட்டுக்கொள்ள கட்டாயப்படுத்த முடியாது. எந்தவித நடவடிக்கைக்கும் தடுப்பூசி சான்றிதழை வைத்திருக்க வேண்டும் என எந்த விதிமுறைகளையும் விதிக்கவில்லை. அதனால் மத்திய அரசு தரப்பில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.
இதுபற்றி அவர் பேசுகையில், கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக தடுப்பூசி செலுத்திக்கொள்வது கட்டாயமில்லை. ஆனால் தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள் எந்தவித கூட்டங்களிலும் பங்கேற்க முடியாது. அலுவலகங்களுக்குள் நுழையமுடியாது. தடுப்பூசி செலுத்த விருப்பமில்லாதவர்கள் வீட்டிலேயே இருந்து கொள்ளலாம். மேலும் தேவைப்பட்டால் அசாமில் மக்கள் தடுப்பூசி சான்றிதழைக் காண்பிக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.