Categories
மாநில செய்திகள்

தடுப்பூசி செலுத்தும் விஷயத்தில்…. மத்திய அரசை நம்பி இருப்பது…. வருத்தம் அளிக்கிறது…!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க தமிழகத்தின் அனைத்து  மாவட்டங்களிலும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இதன் முதற்கட்டமாக 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டது. இதையடுத்து 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. மக்களும் ஆர்வகமாக் தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். இதற்கு மத்தியில் தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் தடுப்பூசி போடும் பணி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், “தமிழ்நாட்டில் இனி கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு வராது. ஏற்கனவே தமிழகத்திற்கு வந்துள்ள 5 லட்சம் தடுப்பூசிகளையும், தற்போது வரவுள்ள 3 லட்சம் தடுப்பூசிகளையும் மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பி மக்களுக்கு போடப்படும் என்று தெரிவித்துள்ளார். மேலும் தடுப்பூசி செலுத்தும் பணியில் மத்திய அரசை நம்பி இருக்கும் சூழல் நிலவுவதாக வருத்தம் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |