கனடாவின் சுகாதாரத்துறை ஆஸ்ட்ராஜனகா நிறுவனத்தின் கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசிக்கு அனுமதியளித்துள்ளது.
கனடாச் சுகாதாரத் துறையான “Health Kanada” பைசர்/பயோஎன்டெக் மற்றும் மாடர்னா நிறுவனங்கள் தயாரித்த கொரோனா தடுப்பூசிகளுக்கு கடந்த டிசம்பர் மாதத்தில் அனுமதியளித்தது. எனினும் நவம்பர் மாதத்தில் வெளியான சோதனையினால் ஆஸ்ட்ராஜனகா நிறுவனத்தின் தடுப்பூசிக்கு அனுமதியளிக்க தாமதப்படுத்தி வந்தது.
இந்நிலையில் தற்போது வெளியான ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் நாட்டின் அனைத்து மூத்த குடிமக்களுக்கும் ஆஸ்ட்ராஜனகா தடுப்பூசி பாதுகாப்பானது தான் என்று அறிந்த பின்பு தற்போது அனுமதி அளித்திருக்கிறது. இதனால் தடுப்பூசி செலுத்தும் திட்டத்தின் வேகத்தை துரிதப்படுத்த கனடா திட்டமிட்டுள்ளது.
மேலும் கொரோனாவை எதிர்த்து 62.1 சதவீதம் செயல்திறன் ஆஸ்ட்ராஜனகா தடுப்பூசி கொண்டிருக்கிறது. இதனை பயன்படுத்தினால் பாதுகாப்பு குறித்த முக்கிய கவலை தேவையில்லை என்றும் அறிவித்திருக்கிறது. இதனைத்தொடர்ந்து கனடா, ஆஸ்ட்ராஜனகா நிறுவனத்திடமிருந்து 20 மில்லியன் டோஸ்கள் வாங்குவதற்கு ஒப்புதல் அளித்துள்ளது. மேலும் கோவாக்சின் நிறுவனத்திடமிருந்து 1.9 மில்லியன் டோஸ்கள் பெற இருப்பதாகவும் தெரிவித்து இருக்கிறது.