Categories
மாநில செய்திகள்

தடுப்பூசி செலுத்துவதில் தமிழக அரசு புதிய சாதனை…. ஒரே நாளில் 28.5 லட்சம் பேருக்கு தடுப்பூசி….!!!!

தமிழகம் முழுவதிலும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக மாபெரும் சிறப்பு தடுப்பூசி முகாம் நேற்று நடத்தப்பட்டது. மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மட்டுமின்றி பள்ளி, கல்லூரிகள், அங்கன்வாடிகள் மற்றும் பொது இடங்கள் என அனைத்துப் பகுதிகளிலும் முகாம்கள் நடத்தப்பட்டன. தமிழகம் முழுவதும் 40 ஆயிரம் தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. காலை 7 மணிக்கு தொடங்கிய தடுப்பூசி முகாம் இரவு 8.30 மணி வரை நடைபெற்றது. அனைத்து மாவட்டங்களை சேர்ந்த மக்களும் மிகுந்த ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.

20 லட்சம் தடுப்பூசி செலுத்த தமிழக அரசு இலக்கு நிர்ணயித்தது. ஆனால் இலக்கை தாண்டி தடுப்பூசி செலுத்தி தமிழக அரசு புதிய சாதனை படைத்துள்ளது. நேற்று ஒரே நாளில் 28,36,776 பேருக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு தமிழக அரசு சாதனை படைத்துள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஒரே நாளில் 28 லட்சம் தடுப்பூசி செலுத்தி சாதனை படைத்துள்ள மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு முதல்வர் ஸ்டாலின் தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.

Categories

Tech |