Categories
தேனி மாவட்ட செய்திகள்

தடுப்பூசி தட்டுப்பாடு எதிரொலி… ஏமாற்றத்துடன் திரும்பும் மக்கள்… அதிகாரி நம்பிக்கை..!!

கொரோனா தடுப்பூசி தேனி மாவட்டத்தில் இருப்பு இல்லாததால் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

தற்போது கொரோனா தொற்று 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. இதனால் பொதுமக்கள் ஆர்வத்துடன் சென்று தடுப்பூசி போட்டுக் கொண்டிருக்கின்றனர். தேனி மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடின்றி செலுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டது. தேனி மாவட்டத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு மருத்துவமனைகளிலும், அங்கீகரிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகளிலும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்தது. நேற்று முன்தினம் சில மையங்களில் கொரோனா தடுப்பூசியை போடவில்லை. மேலும் தடுப்பூசி பல இடங்களிலும் குறைந்த எண்ணிக்கையில் செலுத்தப்பட்டது. தேனிநகர் மற்றும் மாவட்டத்தில் தட்டுப்பாடு எதிரொலியாக சில இடங்களில் தடுப்பூசி செலுத்தி கொள்ள வந்த மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

இதுகுறித்து சுகாதாரதுறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, “இதுவரை சுமார் 47 ஆயிரத்து 3400 பேருக்கு தேனி மாவட்டத்தில் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அதில் சுமார் 41 ஆயிரத்து 600 பேர் முதல் தவணைத் தடுப்பூசியையும், சுமார் 5,800 பேர் இரண்டாவது தவணை தடுப்பூசியையும் செலுத்தி கொண்டனர். தேனி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு 15 தடுப்பூசி ஒதுக்கப்பட்டது. மக்களுக்கு தடுப்பூசி திருவிழா நடத்தப்பட்டு தடுப்பூசி செலுத்தப்படுவதால் ஆர்வத்துடன் மக்கள் வந்தனர். கடந்த 15-ஆம் தேதி சுமார் 3,562 பேருக்கும், அதன் பின் 2,864 பேருக்கும் தடுப்பூசி போடப்பட்டது. நேற்று முன்தினம் 1,252 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. புதிதாக ஒதுக்கீடு வராததால் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அரசு ஓரிரு நாட்களில் ஒதுக்கீடு செய்து விடும் என்ற நம்பிக்கை” உள்ளது என்றும் கூறினார்.

Categories

Tech |